தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் வெளியிடவுள்ளனர்.
சிறுத்தை சிவா இப்படத்தை இயக்க ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பாட்னி நடிக்க, பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பிரமாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், கங்குவா திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை படத்தை பார்த்துவிட்டு தெரிவித்துள்ளார் பாடலாசிரியர் விவேகா.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் “‘கங்குவா’ படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்.. சூர்யா சாரின் நடிப்பு உச்சம்” என படம் குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
Comments are closed.