நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்

16

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே எமது நாட்டிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இவர் மேலும் தெரிவிக்கையில், 17 ஆவது தடவையாக சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளோம்.

வழங்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பாக, நாடாளுமன்றில் கலந்துரையாடப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் அவை மேலதிக வாக்குகளாலும் நிறைவேற்றப்பட்டது.

மக்களின் உரிமைகளுக்கும் நாடாளுமன்ற ஒழுக்கவிதிகளுக்கு மதிப்பளித்தும் நாம் இவற்றை நடைமுறைப்படுத்தினோம்.

கடன்மறுசீரமைப்பு விடயத்தையும் மக்களுக்கு பகிரங்க படுத்தியிருந்தோம்.

ஆனால் கடந்த காலங்களில் நாம் 16 முறை சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினை நாடியிருந்தோம். ஆனால் எமக்கு தோல்வியே ஏற்பட்டிருந்தது.

இந்த தோல்விகளின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சர்வதேச நாணயநிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பாகவோ அல்லது முன்வைக்கப்பட்ட நிபந்தனை தொடர்பாகவோ மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.

Comments are closed.