தென்னிலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda ), மூன்று மீன்பிடித் துறைமுகங்களுக்கு பயணம் செய்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தாவின் இந்த பயணத்தில் சிறிலங்கா எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவும் (Kanchana Wijesekera) இணைந்து கொண்டுள்ளதுடன், குறித்த துறைமுகங்களில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளனர்.
சிறிலங்கா கடற்றொழில் அமைச்சினால் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கந்தர மீன்பிடித் துறைமுகத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அதன் கட்டுமானப்பணிகள் நிறைவுக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், குறித்த துறைமுகப் பகுதியிலுள்ள அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுடனும் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளார்.
கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த துறைமுகத்தை அமைக்கும் நடவடிக்கை நான்கு ஆண்டுகள் தாமதமடைந்திருந்ததாக இந்த பயணத்தில் இணைந்து கொண்ட சிறிலங்கா எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
Comments are closed.