மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல சீரியல் நடிகை… அவரே பதிவிட்ட ஷாக்கிங் தகவல்

16

தமிழிலேயே உருவாக்கப்பட்ட தொடர்களை தாண்டி மற்ற மொழி தொடர்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாவது வழக்கம்.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஹிந்தி தொடர்கள் அதிகம் ஒளிபரப்பாகி இருக்கிறது. அப்படி ஒரு தொடர் தான் உறவுகள் தொடர்கதை, குடும்பங்கள் கொண்டாடும் தொடராக இந்த சீரியல் அமைந்தது.

தற்போது ஹிந்தியில் இந்த தொடர் பெயரில் பல சீசன்கள் வந்துவிட்டன.

இந்த நிலையில் உறவுகள் தொடர்கதை தொடர் மூலம் பிரபலமான ஹினா கான் தனது இன்ஸ்டாவில் ஷாக்கிங் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர், நான் மார்பக புற்றுநோய் 3வது ஸ்டேஜில் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதோடு தற்போது தேவையான சிகிச்சை பெற்று குணமாகி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அவரின் இந்த பதிவு கண்டு ஷாக் ஆன பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நீங்கள் தைரியமானவர், கண்டிப்பாக இதில் இருந்து மீண்டு வருவீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Comments are closed.