பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகள்: முன்னிலை வகிக்கும் நாடு

16

பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாக இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாக இருப்பதாக Dun & Bradstreet என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.

குறிப்பாக, 68.8 சதவிகித சுவிஸ் நிறுவனங்கள் சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கின்றன என அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, டென்மார்க் (94.2%), போலந்து (82.7%) மற்றும் நெதர்லாந்து (76.1%) ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே சரியான நேரத்தில் செலுத்துவதாகக் கண்டறியப்பட்டது. ஸ்பெயின் (46.7%), இத்தாலி (41.1%) மற்றும் போர்ச்சுகல் (19.2%) போன்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் சம்பளம் கொடுக்கும் தரவரிசையில் கீழே உள்ளன.

சுவிட்சர்லாந்தில் உள்ள துறைகளை ஒப்பிட்டு நோக்கும்போது, கட்டுமானம் (75.2%) மற்றும் நிதி (73.5%) துறைகளில் உள்ள நிறுவனங்கள் மிகவும் நம்பகமானவை, அதைத் தொடர்ந்து மொத்த விற்பனை (63.3%) மற்றும் சில்லறை விற்பனை (62.9%) ஆகிய துறைகள் தங்கள் பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குகின்றன.

ஆனால், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள், தகவல் தொடர்பு சேவைகள் மற்றும் உள்ளூர் மற்றும் தொலைதூர போக்குவரத்து துறைகளில் சரியான நேரத்தில் சம்பளம் கொடுப்பதில் குறிப்பிடத்தக்க அளவில் மோசமான நிலை காணப்படுவதையும் மறுப்பதற்கில்லை.

ஒரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், உலகம் முழுவதுமே, பெரிய நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் தங்கள் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றன.

Comments are closed.