20 வீத மின் கட்டண குறைப்பிற்கான வழி தொடர்பில் வெளியான தகவல்

0 2

இலங்கையில் மின்சார கட்டணத்தை 20 சதவீதம் வரையில் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மின்சார சபை கடந்த 2023ஆம் ஆண்டு 57 பில்லியன் ரூபாவையும், 2024ஆம் ஆண்டு 144 பில்லியன் ரூபாவையும் இலாபமாக ஈட்டியது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 22 சதவீத கட்டணக் குறைப்பைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபையின் 200 பில்லியன் ரூபாவில் இருந்து 51 பில்லியன் ரூபாவை ஆறு மாத காலத்திற்குப் பயன்படுத்த அனுமதித்தது.

எனினும் 18 பில்லியன் ரூபாவை மாத்திரமே மின்சாரசபை பயன்படுத்திய போதிலும் சுமார் 183 பில்லியன் ரூபா மீதமுள்ளது.

இந்நிலையில் எதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.