முள்ளிவாய்க்கால் ஒரு புண்ணிய பூமி : சிங்கள இளைஞனின் உருக்கமான பதிவு

0 0

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் வடக்கிற்கு செல்ல மே 18ஆம் திகதியே சிறந்த நாள் என முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) மண்ணில் இருந்து சிங்கள இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் நேற்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற பின்னர், முகநூலில் பதிவொன்றை வெளியிட்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாங்கள் இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் இருக்கின்றோம். இது ஒரு புண்ணிய பூமி. உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து அவர்களது உறவினர்கள் சுடர் ஏற்றி வழிபடுகின்றனர்.

ஆனால் கடந்த 16 வருடங்களுக்கு முன்னர் இந்த புண்ணிய பூமியில், இடம்பெற்ற இறுதிப் போரின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் தகவலுக்கமைய 70,000 பேர் வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

உத்தியோகப்பூர்வ தகவல்களுக்கமைய 150,000 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வெறும் அப்பாவி குடிமக்களே கொல்லப்பட்டனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

உயிரிழந்தவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்காத மக்கள் இங்கு வருகைதந்து அவர்களை நினைவு கூருகின்றனர். இந்நிலையில், தெற்கில் உள்ளோர் வடக்கிற்கு செல்ல மே 18 ஆம் திகதியே சிறந்த நாள் என்று”அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.