இலங்கையில் அதிக விலை கொண்ட புதிய வாகனங்களுக்கான கேள்வி தொடர்பில் வெளியான தகவல்

0 3

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் அதிக விலையை கொண்டிருக்கின்ற போதும், இலங்கையில் தற்போது புதிய வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் மொத்தம் 5,000 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் அதிக விலையாக இருந்தபோதும் 3,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம் சந்தையில் புதிய வாகனங்களுக்கான வலுவான, நிலையான தேவை இன்னும் உள்ளதாக மானகே குறிப்பிட்டுள்ளார்.

பல நடுத்தர வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் நிதி வசதிகளுக்குள் வாகனங்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.