போர் நிறுத்தத்துக்கு பின்னர் முதல் தடவையாக, இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை நேற்று மதியம் 12 மணிக்கு இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் மாலையிலேயே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் இணக்கங்கள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இந்த பேச்சுவார்த்தை இரண்டு நாடுகளின் போர் நடவடிக்கை இயக்குநர்களுக்கு இடையில் தொலைபேசி வாயிலாக இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.