அஸ்வசும திட்டத்தின் கீழ் அனைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களும் நன்மைகளைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை காலியில் (Galle) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பல நன்மைகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அதில் மக்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கும் திட்டம் முக்கிய இடத்தைப் பெறுவதுடன் அஸ்வசும திட்டத்தின் கீழ் அனைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களும் நன்மைகளைப் பெறுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது சமுர்த்தி மானியத்தின் மூன்று மடங்கு நன்மைகளைக் கொண்டுள்ளதெனவும் சகல துறைகளையும் உள்ளடக்கிய அபிவிருத்தி திட்டங்கள் தற்போது நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.