அமெரிக்காவின் பாதுபாப்பு மையமான பென்டகன் திருநங்கைகளாக அடையாளம் காணும் 1,000 இராணுவ உறுப்பினர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருநங்கை இராணுவ உறுப்பினர்கள் மீதான தடையை நடைமுறைப்படுத்திய ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கி அந்நாட்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பால் இந்த திட்டம் மேலும் வலுப்பெற்றுள்ளது .
மேலும் சிலரை அடையாளம் காண மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்வதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக தேசிய பாதுகாப்பு சேவையில் உள்ள 4,240 துருப்புக்கள் பாலின டிஸ்ஃபோரியா நோயால் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருப்பினும் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாகவே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்க அரசாங்கம் முனைப்பு காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.