வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல் வார்ட் அருகே வழிந்தோடும் கழிவுநீர் வடிகாண் அருகில் சேர்ந்திருந்த மண்ணை அகற்ற முனைந்தபோதே அதற்குள் இருந்து குறித்த கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கைத்துப்பாக்கி 0.38 ரக கைத்துப்பாக்கி என்றும், பல வருடங்களாக மண்ணுக்குள் புதையுண்டு கிடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
சிறைச்சாலை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் பொரளை பொலிசார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து கைத்துப்பாக்கியை மீட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.