புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான பணிகளில் வத்திக்கான் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டதை உலகம் அறியும் புகைபோக்கி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ், இத்தாலியின் வத்திக்கானில் காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது.
உலக தலைவர்கள் அஞ்சலிசெலுத்திய பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பாப்பரசர் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியது.
புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் பணி எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெற உள்ளது.
பாப்பரசரின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில் 80 வயதுக்குட்பட்ட அனைத்து கர்தினால்களும் இரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளனர்.
அவர்கள் ஒன்று கூடி இரகசியமாக நடத்தும் வாக்கெடுப்பில் , 89 கர்தினால்களின் ஆதரவை பெறுபவர், அடுத்த பாப்பரசராக தேர்வு செய்யப்படுவார்.
புகைபோக்கியிலிருந்து வெள்ளைப் புகை வெளியேறும்படி சிறப்பு இரசாயனங்களைப் பயன்படுத்தி காகித வாக்குச் சீட்டுகளை ஒரு அதிகாரி எரிக்கும் போது, ஒரு பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதை உலகம் அறியும்.
பின்னர் புதிய பாப்பரசர் தோன்றி சதுக்கத்தில் உள்ள கூட்டத்தினருக்கு தனது ஆசீர்வாதத்தை வழங்குவார்.
அன்றைய தினம் புதிய பாப்பரசர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அந்த புகைபோக்கியில் இருந்து கரும்புகை வெளியேறும்.