கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் கடந்த 18ஆம் திகதி விஷச்சாராயத்தை அருந்திய பலர் உடல்நலம் மோசமாகி உயிரிழந்தனர்.
பின்னர் சேலம், புதுச்சேரி, விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் இன்னும் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
நேற்று முன்தினம் வரை 40 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று சிலரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் விஷச்சாராயத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 148 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
Comments are closed.