கள்ளச்சாராயத்தை விற்ற வியாபாரி கன்னுகுட்டி என்பவர் பொலிஸார் விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளார்.
தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதில், தற்போது வரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சாராயத்தை விற்ற கன்னுக்குட்டி, விஜயா, தாமோதரன், ஜோசப் ராஜா, முத்து, சின்னத்துரை ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மருத்துவர்கள் மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையில் சாராயத்தில் மெத்தனாலின் அளவு அதிகரித்து தான் உயிரிழப்பிற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து சாராய வியாபாரிகளிடம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். இதில், ராமர் என்கிற சாராய வியாபாரி தனக்கான பங்கினை வீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார். அப்போது ராமரின் தந்தை அந்த சாராயத்தை குடித்ததும் அரை மணி நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தனது தந்தையை மருத்துவமனையில் சேர்த்த ராமர் மற்ற வியாபாரிகளுக்கு போன் செய்து சாராயத்தை விற்க வேண்டாம் எனவும், அதில் விஷம் கலந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பின்னர்,வியாபாரிகள் சாராயத்தை கொட்டி அழித்துள்ளனர். ஆனால், இதில் கன்னுகுட்டி என்ற வியாபாரி மட்டும் விஷம் கலந்திருப்பது தெரிந்தும் அதனை விற்பனை செய்துள்ளார்.
அதாவது, தன்னிடம் இருந்த 330 லிட்டர் விஷ சாராயத்தில் 250 லிட்டர் வரை விற்றுள்ளார். இவரிடம் வாங்கி குடித்தவர்களுக்கு தான் தற்போது உயிரிழந்து வருகிறார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.