2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சாதித்துக் காட்டிய பெண் பரீட்சார்த்திகள்

0 0

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் ஆண் பரீட்சார்த்திகளை விட பெண் பரீட்சார்த்திகள் அதிக சதவீதத்தில், பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை எழுதிய அனைத்து பரீட்சார்த்திகளில் 64.73% பேர் பல்கலைக்கழக நுழைவுத் தகுதி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெண் பரீட்சார்த்திகளில், 71.93% பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர், அதே நேரத்தில் ஆண் பரீட்சார்த்திகளில் 60.24% பேரே பல்கலைக்கழகத் தகுதியை பெற்றுள்ளனர்.

மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர்களின் சதவீதத்திலும் இதேபோன்ற போக்கு அவதானிக்கப்பட்டுள்ளது.

அதில், ஆண் பரீட்சார்த்திகளில் 13.87% மானோரும், பெண் பரீட்சார்த்திகளில் 8.6% மானோரும் மூன்று பாடங்களிலும் சித்தியடையவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.