ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலரும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் முரண்படத் தொடங்கியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச இருந்த போதும் அவரது மனைவி ஜலனி பிரேமதாச மற்றும் அவரது நண்பர் லக்ஷ்மண் ஆகியோரே கட்சியின் முக்கிய விடயங்களைக் கட்டுப்படுத்தி வருவதாக நீண்ட காலமாக விமர்சனம் ஒன்று முன்வைக்கப்படுகின்றது.
அண்மையில் சஜித் பிரேமதாசவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் இது குறித்த அதிருப்தியை நேரடியாக அவரிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.
எனினும் அவ்வாறான வெளிநபர்கள் யாரும் கட்சியின் விடயங்களில் தலையிடுவதில்லை என்று சஜித் பிரேமதாச மறுப்புத் தெரிவித்துள்ளார்.
ஆயினும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் இந்த நிலை குறித்து மீண்டும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும், வௌியாரின் தலையீடு தொடரும் பட்சத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கடுமையான தீர்மானமொன்றை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாசவிடம் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.