பிள்ளையானுக்கு மிக அருகில் இருந்தவர் எடுத்த திடீர் தீர்மானம்! இன்று வெளிவரப்போகும் பல உண்மைகள்

0 3

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக பிள்ளையானுடன் பணியாற்றிய நபர் ஒருவர் தானே முன்வந்து குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் சரணடையவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

இதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையானிடம் விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் விரைவாகவும், புதிய கோணத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக ஒரு குழுவினர் அச்சமடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பிள்ளையானுக்கு மிக அருகில் இருந்தவர் எடுத்த திடீர் தீர்மானம்! இன்று வெளிவரப்போகும் பல உண்மைகள் | Easter Attack Sri Lanka 2019

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தாக்குதல் நடைபெற்று ஆறு வருடங்கள் ஆகின்றன. பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. எமது அரசாங்கம் புதிய கோணத்தில் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளது.

இதன்படி, பிள்ளையானுடன் உடன் பணி புரிந்ததாகக் கூறப்படும் ஒருவர் இன்று சரணடைய வருகின்றார். இவர் பிள்ளையானுக்கு மிக அருகில் இருந்த ஒருவராகும். இவரது வாக்குமூலத்தின் மூலம் பல தகவல்கள் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.