சஹ்ரான் தொடர்பில் பிள்ளையான் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

0 3

தற்கொலைக் குண்டுதாரிகளாக பெண்களைப் பயிற்றுவிப்பதற்கு சஹ்ரான் ஹாசிம் தனியான பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியுள்ளதாக பிள்ளையான் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிள்ளையான் எழுதி வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான நூலிலேயே இந்தத் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இணையத்தள செய்திச் சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் பிரகாரம் கடந்த 2018ஆம் ஆண்டு காத்தான்குடியில் நடைபெற்ற பெண்களுக்கான தற்கொலைக் குண்டுதாரிகளுக்கான பயிற்சியில் 15 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மாவனல்லை புத்தர் சிலை தாக்குதல் சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட லத்தீபா என்ற பெயரில் அறியப்படும் இப்ராஹிம் சஹீதா என்பவர் அவர்களில் ஒருவராவார்.

அத்துடன் சாய்ந்தமருது வீட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தற்கொலைக் குண்டுதாரிகளாக பயிற்சி பெற்ற ஐந்து பெண்கள் உயிரிழந்திருந்தனர்.

மேலும், மூன்று பெண்கள் விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்றும் பிள்ளையான் குறிப்பிட்டுள்ளதாக குறித்த செய்தியில் தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.