அதிவேகமாக செல்லும் வாகன சாரதிகளை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் புதிய தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
புதிய தொழில்நுட்பம் கொண்ட வேகத்தை கணிக்கும் கெமராக்களை பொலிஸார் பயன்படுத்துகின்றனர்.
குறித்த கெமராவில் சாரதியின் புகைப்படம், வாகன எண் மற்றும் வேகத்தை நிகழ்நேரத்தில் படம்பிடிக்கும் இரட்டை கெமராக்கள் மற்றும் இரவு பார்வை தொழில்நுட்பம் ஆகிய அம்சங்கள் உள்ளன.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த கெமராவை கொண்டு இரவில் கூட 1.2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வாகனங்களை கண்டறிய முடியும்.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட காணொளிகள் நீதிமன்றத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான தெளிவான ஆதாரமாக செயற்படும்.
இவ்வாறு நாடு முழுவதும் 30 கெமராக்கள் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.