2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீடு நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் சில நாட்களில் பெறுபேறுகள் தயாரிக்கப்பட்டு சரிபார்க்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மாத இறுதியில் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.