கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஜய்யின் காலில் யாரும் விழச்சொல்லவில்லை : பாதிக்கப்பட்ட பெண் விளக்கம்
தமிழ் நாட்டின் கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத சாராயம் குடித்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளதோடு, மேலும் பலருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் தமிழ் நாட்டின் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கள்ளக்குறிச்சிக்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதில் ஒருக்கட்டமாக நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய், கள்ளக்குறிச்சிக்கு சென்றிருந்தார். இதன்போது மருத்துவமனையில் வைத்து பெண் ஒருவர் விஜய்யின் காலில் வீழ்ந்த சம்பவம் அரசியலாக்கப்பட்டிருந்தது.
முன்னதாக விஜய் அருகில் வரும்போது அவரின் காலில் விழுமாறு, தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஒருவர் வழங்கிய ஆலோசனையின் பேரிலேயே அந்த பெண், விஜய்யின் காலில் வீழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் புகைப்படங்களும், காணொளிகளும் வெளியாகியிருந்தன. எனினும் இதனை விஜய்யின் கட்சி மறுத்திருந்தது.
இந்தநிலையில் தற்போது குறித்த பெண்ணே, வெளியாகியுள்ள குறித்த செய்தியை மறுத்துள்ளார் விஜய்யின் காலில் விழுமாறு யாரும் தம்மிடம் கூறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.