மோடியின் வருகையை அடுத்து இலங்கைக்கு எற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்

0 2

கடலூர் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடலூர் துறைமுகத்தில் இருந்து இரும்பு தாது உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதியும், யூரியா, டி.ஏ.பி போன்ற பொருட்கள் இறக்குமதியும் நடந்துள்ளன.

எனினும் 2002இற்கு பின் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதன் பின், சாகர் மாலா திட்டத்தில் இத்துறைமுகம் மேம்படுத்தப்பட்டு, ஏற்றுமதி, இறக்குமதிக்கு தயார் நிலையில் இருந்துள்ளது.

அதன்படி, இலங்கைக்கு கட்டுமான பொருட்கள், சீமெந்து, வெங்காயம், துணி வகைகள் மற்றும் இதர பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

குறிப்பாக, பாம்பன் பாலம் திறக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும், 10ஆம் திகதி வெங்காயம் ஏற்றுமதி ஆரம்பிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சரக்கு போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடலூர் துறைமுகத்தில் சிறிய அளவிலான பாய்மரக் கப்பல்கள், மிதவைகள் கையாள்வதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளுடன், சுங்கம், குடிவரவு குடியகல்வு, சுகாதாரத்துறை ஆகிய பிரிவுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.