டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு இலங்கைக்கு சவால் இல்லை : அமைச்சர் விளக்கம்

0 1

அமெரிக்காவின் வரி விதிப்பு இலங்கைக்கு சவாலாக இருக்காது என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மீது 44 வீத வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.

எனினும் இந்த வரி விதிப்பானது தற்போதைக்கு இலங்கைக்கு பிரச்சினையாக மாறாது என அமைச்சர் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கை புதிய வரிக் கொள்கை தொடர்பிலான சட்ட மூலமொன்றை நாடாளுமன்றில் நிறைவேற்றிக்கொள்ள உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வேறும் நாடுகளுடன் ஏற்படுத்திக்கொள்ளும் வர்த்த தடைகளினால் இலங்கைக்கு சாதக நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வரி விதிப்பினை தடையாக பார்க்காது வேறும் சந்தைகளுக்கான வாய்ப்பாக நோக்குவதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க வரிவிதிப்பு குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.