தரம் 5 புலமைப்பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவித்தல்

15

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (27) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, 14 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை நிகழ்நிலை (Online) மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் பரீட்சை தொடர்பில் மேலதிக தகவலுக்கு www.onlineexams.gov.lk என்ற இணையதளத்தை அனுகவும்.

அத்தோடு, மேலதிக விபரங்களை 0112784537, 0112786616 அல்லது 1911 பரீட்சை திணைக்கள அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

Comments are closed.