தீ பரவலால் தத்தளிக்கும் வெளிநாடு: நிர்கதியாகும் மக்கள் – உயரும் பலி எண்ணிக்கை

0 6

கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக தென் கொரியாவில் தொடர்ந்து வரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 24 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 60 மற்றும் 70 வயதுடையவர்கள் என்று அதிகாரிகள் கூறப்படுவதோடு, மேலும் சுமார் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, அவர்களில் 12 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தீ விபத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான ஒரு விகாரை எரிந்து நாசமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அங்கிருந்த பல கலாச்சார நினைவுச்சின்னங்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

அத்தோடு, பலத்த மற்றும் வறண்ட காற்றினால் தீ, அன்டோங், சியோங்சாங், யோங்யாங் மற்றும் யோங்டியோக் ஆகிய பகுதிகளுக்கு பரவி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 27,000 பேர் வரையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.