தேசபந்து தொடர்பில் நீதிமன்றில் வெளியான மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்

7

இலங்கை வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் பொலிஸ் தரப்பில் தலைவராக இருந்து செய்த கொடூரமான குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்னகோன் முதியன்சேலாகே வன்சலங்க தேசபந்து தென்னகோன் தொடர்பான பிணை மனுவானது நேற்று நிராகரிக்கப்பட்டிருந்தது.

அவரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் இந்திரஜித் புத்ததாச நேற்று உத்தரவிட்டிருந்தார்.

தென்னகோன் தொடர்பான நேற்றைய விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் நீதிமன்றில் இருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கக் கூடும்.

இதற்கு காரணம் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளில், தேசபந்து தென்னகோன் நிரந்தர குடியிருப்பு அற்றவர் என்றும், வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டமையே.

12 பக்க நீண்ட அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் , அவருக்கு எதிராக 9 புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவை குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொள்ளவும், அவர் ஒளிந்து கொள்ள உதவியவர்களை விசாரிக்கவும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கையை முன்வைத்தார்.

குறித்த 12 பக்க வழக்கு அறிக்கையிலிருந்த முக்கிய விடயங்கள் பின்வருமாறு அமைந்திருந்தது.

சந்தேக நபர் தென்னகோன் முதியன்சேலகே வன்ஷாலங்கார தேசபந்து தென்னகோன் எதிராக மனுதாரர், குற்றப் புலனாய்வுத் துறை வழக்கு எண் – பி.ஆர். 6314/23 மாத்தறை நீதவான் நீதிமன்றம்.

மேலே குறிப்பிடப்பட்ட சந்தேக நபர் தனது சட்டத்தரணிகள் மூலம் 2025 மார்ச் 19 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையானபோது தாக்கல் செய்த பிணை விண்ணப்பம் தொடர்பான உத்தரவை பின்வருமாறு சமர்ப்பிக்கிறேன்.

இந்த வழக்கு தொடர்பாக இந்த நீதவான் நீதிமன்றம் பெப்ரவரி 27, 2025 அன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

மேலும் அந்த உத்தரவின்படி நீதிமன்றம் மேற்கொண்ட முடிவுகளின்படி மற்றும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில், சந்தேக நபரை இந்த வழக்கில் முதல் சந்தேக நபராகக் குறிப்பிட்டு அரசு தரப்பு 2025.03.11 திகதியிட்ட தகவல் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

எனவே, இந்த வழக்கின் முதல் சந்தேக நபருக்கு எதிரான விசாரணைக்கு உட்பட்ட குற்றச்சாட்டுகள் பின்வருமாறு.

Comments are closed.