ஓய்வு குறித்து ரோஹித் சர்மா வெளியிட்ட அறிவிப்பு

0 0

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி நேற்று (10) வெற்றிபெற்றது.

இதன்படி 3 ஆவது முறையாக செம்பியன்ஷிப் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியது.

இந்தநிலையில் செம்பியன்ஷிப் தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவாரென சமூக வலைத்தளங்களில் வெளியான வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதற்கமைய நேற்றைய போட்டி நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.