பொருளாதார பிரச்சினை காரணமாக மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வியமைச்சின் கணக்கெடுப்பிற்கு அமைவாக 50,345 மாணவர்கள் இடைவிலகியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் 2,754 பேர் இடைவிலகியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும் அதனுடைய பணிகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை.
இந்த விடயத்தை நாம் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். எனினும் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவை தாம் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.
Comments are closed.