பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இளம் ஹீரோயினாக வலம் வருகிறார் ஜான்வி கபூர். தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர் Dhadak எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ஜான்வி, கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த தேவரா திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து தற்போது ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் புதிய தமிழ் வெப் தொடரின் மூலம் தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைக்கவுள்ளார் என தகவல் கூறப்படுகிறது.
இன்று நடிகை ஜான்வி கபூரின் 28வது பிறந்தநாள். ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 82 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறாராம்.
இவருக்கு சொந்தமாக மும்பையில் 3BHK அபார்ட்மெண்ட் ஒன்று இருக்கிறது. இதனுடைய மதிப்பு ரூ. 39 கோடி இருக்குமாம். அதே போல் ரூ. 65 கோடி மதிப்பில் மும்பை பாந்த்ரா பகுதியில் இவருக்கு சொந்தமாக வீடு ஒன்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.