இலங்கையிலுள்ள (Sri Lanka) மக்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவலை சுகாதார வைத்திய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் 2.2 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மாளிகாவத்தை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் அனுபமா டி சில்வா தெரிவித்துள்ளார்.