கடற்கரையில் சிக்கிய மர்ம பொருள் – வெளியேற்றப்பட்ட மக்கள்

9

களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்துள்ளது.

மர்ம பொருள் ஒரு சாதனமாக உள்ளதெனவும் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை கட்டுகுருந்த விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கு நின்றவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பின்னர் பரிசோதனைக்காக சாதனத்தை பாதுகாப்பாக எடுத்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிலிருந்து ஓரளவு வெளிச்சம் வெளிப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Comments are closed.