ஈரானில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

15


ஈரான்(Iran) நாட்டின் வடகிழக்கு நகரமான காஷ்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்ததுடன், 120 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டு நேரப்படி மதியம் 1.24 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன்போது கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் குறித்த பகுதியில் இருந்து வெளிய நிலையில் சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2003ஆம் ஆண்டு ஈரானின் தென்கிழக்கு நகரமான பாமில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 31,000 க்கும் அதிகமான மக்களைக் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ரஃபாவில் 50 சதவிகித ஹமாஸ் அமைப்பினரை வீழ்த்திய இஸ்ரேல்
ரஃபாவில் 50 சத

Comments are closed.