நடிகர் விஜயை பின் தொடரும் உளவுத்துறை!

0 1

தென்னிந்திய நடிகரும் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவருமான விஜயை (Vijay) உளவுத்துறை பின் தொடர்வதாக தமிழ்நாட்டினைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளருமான சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், விஜயுடைய வரவு தி்.மு.கவில் உள்ளவர்களை கலக்கிப் போட்டுள்ளது.

இந்தநிலையில், விக்கிரவாண்டி மாநாட்டில் பா.ஜ.கவையும், தி.மு.கவையும் மறைமுகமாக, கடுமையாக விஜய் பேசியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தினால் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M.K Stalin) தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) ஆகியோர் 24 மணி நேரமும் விஜயைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், மற்றைய விவகாரங்களை விட்டுவிட்டு உளவுத்துறை விஜயைக் கண்காணித்துக் கொண்டிருப்பதாவும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.