க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, அன்று தொடங்கி மார்ச் 26 வரை தொடரும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் உரிய பாடசாலையின் அதிபருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைக்காதவர்கள் மார்ச் 07 திகதி முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஐப் பார்வையிட்டு அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனுமதி அட்டையில் உள்ள பாடம், மொழி மற்றும் பெயரில் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், மார்ச் 10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு மாற்றங்களை இணையதளத்தின் ஊடாக செய்ய வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Comments are closed.