பௌத்த மதம் சார்ந்து ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

14

பௌத்த மதத்திற்கு பாதகமான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தின் இருப்பிற்கு குந்தகம் ஏற்படக்கூடிய எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் அமைப்புக்களின் அனைத்து ஒப்பந்தங்களிலும் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கு நீதிமன்றம், நாடாளுமன்றம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் என்பனவற்றுக்கு உரிமையில்லை.

நாட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Comments are closed.