ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி என பல ஹீரோக்கள் டாப்பில் இருந்த நேரத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி முக்கிய நடிகராக வலம் வந்தவர் அர்ஜுன்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் தற்போது நெகட்டீவ் ரோல், குணச்சித்திர கதாபாத்திரம் என நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் லியோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமைய்யா மகன் உமாபதியும் காதலிக்க வீட்டில் பெற்றோர்கள் சம்மதத்தையும் பெற்றுள்ளார்.
பெற்றோர்கள் சம்மதத்துடன் ஐஸ்வர்யா-உமாபதி இருவருக்கும் கடந்த ஜுன் 10ம் தேதி படு கோலாகலமாக திருமணம் நடந்தது.
அதோடு கடந்த ஜுன் 14ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது, இதில் ரஜினி, ஷாலினி அஜித், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அர்ஜுன் தனது மகளுக்கு ரூ. 500 கோடி வரதட்சணை வழங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர் கூறுகையில், நடிகர் அர்ஜுனுக்கு சென்னை போரூரில் நிறைய இடங்கள் உள்ளது, ஏன் ஒரு கிராமமே அவருக்கு உள்ளது.
அவருக்கு கோடிக்கணக்கில் மதிப்பு கொண்ட ஆடம்பர சொகுசு பங்களாவை பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது, அவை எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை என கூறியுள்ளார்.
நடிகர் அர்ஜுனுக்கு ரூ. 1000 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் பல கோடி சீதனமாக அவர் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Comments are closed.