அமெரிக்காவிற்கு கனடா விடுத்துள்ள எச்சரிக்கை

0 1

கனடாவை(Canada) அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக மாற்ற முற்பட்டால் அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது.

மேலும், அமெரிக்காவிற்கு(USA) அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவோம் என்றும் கனடா தெரிவித்துள்ளது.

இன்று கனடா மீது ட்ரம்ப் 20% வரியை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையிலேயே கனடா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்(Justin Trudeau) பதவியேற்ற பின்னர், 4 முக்கியமான நாடுகளை அல்லது வேறு நாட்டின் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக இராணுவ படைகளை களமிறக்கவும் தயார் என்றும் அறிவித்தார்.

பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும், அதோடு கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக அவர் கடந்த சில நாட்களாகவே பேசி ட்ரம்ப் சில நாடுகளை இணைக்க தேவைப்பட்டால் மொத்த இராணுவத்தையும் அனுப்புவேன்.

ஆனால் கனடாவை பொறுத்தவரை அப்படி இல்லை அவர்களுக்கு பொருளாதார அழுத்தம் கொடுப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்,இன்று கனடா மீது ட்ரம்ப் 20% வரியை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் எரிபொருளை நம்பி நாங்கள் இல்லை. கனடாவின் எரிபொருளை நம்பித்தான் அமெரிக்கா இருக்கிறது.

இப்படி இருக்க அமெரிக்கா எங்கள் மீது கூடுதல் வரியை விதிப்பது சரியாக இருக்காது. அப்படி விதிக்கும் பட்சத்தில் கனடாவின் எரிபொருளை அவர்கள் வாங்க முடியாது . மாறாக ரஷ்யாவிடம் எரிபொருள் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம்.

சீனா, வெனின்சுலா போன்ற நாடுகளிடம் வேண்டுமானால் எரிபொருள் வாங்கிக்கொள்ளலாம். எங்கள் மீது 25% வரி விதிக்கும் பட்சத்தில் நாங்கள் அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்க மாட்டோம் என்று கனடா அறிவித்து உள்ளது.

ஒவ்வொரு வருடமும் கனடா அமெரிக்காவிற்கு கணிசமான அளவு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை வழங்கி வருகிறது.

2024 இல், கனடா ஒரு நாளைக்கு சுமார் 2.76 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியில் 60% ஆகும் அந்த அளவிற்கு அமெரிக்கா கனடாவை நம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.