தாய்லந்து விசா விதிகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு

0 2

தாய்லாந்து அரசாங்கம் அதன் விசா விதிகளில் பெரும் மாற்றங்களை அறிவித்துள்ளது.

இத்தகைய மாற்றங்கள் தாய்லாந்தை உலகளாவிய திறமையான நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் முன்னிலை நாடாக மாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1- LTR விசா அனுமதி பெறுவது எளிதாகும். நீண்ட கால குடியிருப்புக் (Long Term Resident) அனுமதிக்கான வருவாய் வரம்பு நீக்கப்பட்டுள்ளது.

2- குடும்ப உறுப்பினர்களுக்கு கட்டுப்பாடு இல்லை: LTR விசா பெறுவோரின் குடும்பத்தினரின் எண்ணிக்கையில் எவ்வித உச்சவரம்பும் கிடையாது. இதற்கு முன், நான்கு உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

3- அனைத்து வருவாய் வரம்புகள் நீக்கம்: செல்வந்த வெளிநாட்டு குடிமக்களுக்கான விசாவில் வருடாந்திர வருவாய் வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டில் அறிமுகமான LTR விசா திட்டம், கோவிட் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் அதிகரிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டது.

இதன் மூலம், LTR விசா பெறுபவர்கள் 10 வருடங்களுக்கு தங்க அனுமதி, டிஜிட்டல் வேலை அனுமதி, வரி சலுகைகள் போன்ற பல நன்மைகளை பெறுகின்றனர்.

இத்தகைய மாற்றங்கள் தாய்லாந்தை முதலீட்டாளர்கள் முன்னுரிமை அளிக்கும் நாடாக மாற்றும் என நம்பப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.