அமெரிக்காவிற்கு விஜயமாகவுள்ள ஜனாதிபதி!

17

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அடுத்த வெளிநாட்டு விஜயம் அமெரிக்காவிற்கானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் ஜனாதிபதி, ஜப்பானுக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்வார் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார, பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பிராந்தியத்தின் பலம் பொருந்திய நாடுகளான இந்தியா மற்றும் சீனாவிற்கு விஜயம் செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் அனைத்து நாடுகளுடனும் பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயங்களை ஜனாதிபதி மேற்கொள்வதாக கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

Comments are closed.