ஒரே நாளில் ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் விடுவிப்பு!

0 0

பிரதான முனையத்திலிருந்து, 2,293 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த கொள்கலன்கள் பிரதான முனையத்திலிருந்து நேற்று (18) விடுவிக்கப்பட்டதாக அந்த தெரிவித்துள்ளது.

அத்துடன் துறைமுகத்தில் சிக்கிய கொள்கலன்களில் ஒரு குறிப்பிட்ட அளவை உரிய நேரத்தில் விடுவிக்க துறைமுகம் மற்றும் சுங்கத் துறைகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இலங்கை சுங்கத்தால் அகற்றப்பட்டு துறைமுக வாயில்கள் வழியாக 2,074 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், முனையங்களை விட்டு வெளியேறும் அளவை விட வாயில்களில் இருந்து வெளியேறும் அளவு குறைவாக இருப்பதால் கொள்கலன் நெரிசல் குறையவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

Leave A Reply

Your email address will not be published.