லேப்டாப்பில் சார்ஜ் போட்டுக்கொண்டே வேலை செய்த போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர், கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்த தம்பதியினர் சக்தி குமார் (50) மற்றும் சிவகாமி. இவரது மகள் செந்திமயில் (22).
பி.எஸ்.சி பட்டதாரியான இவருக்கு கடந்த 2 இரு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவருடைய கணவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு செந்திமயில் தனது லேப்டாப்பை சார்ஜ் செய்தவாறு வேலை பார்த்துள்ளார். அப்போது, சார்ஜர் வயரில் பின்பகுதி அறுந்திருப்பது தெரியாமல் அதன் மீது கை வைத்ததாக தெரிகிறது.
அந்த நேரத்தில் மின்சாரம் தாக்கி செந்திமயில் தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனே அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.