64 பேரால் தவறாக நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ள சிறுமி

0 1

இந்தியாவின் கேரளா பத்தனம் திட்டா மாவட்டத்தில் நான்கு வருட காலப்பகுதியில் சுமார் 64 பேரால் தாம் தவறான செயல்களுக்கு உட்படுத்தப்பட்டதாக 18 வயதான சிறுமி ஒருவர் முறையிட்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டை அடுத்து ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதே நேரத்தில் குற்றம் சுமத்தப்பட்ட ஆறாவது நபர் ஏற்கனவே மற்றுமொரு குற்றத்துக்காக சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் பயிற்சியாளர்கள், வகுப்பு தோழர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த சிறுமிக்கு தனிப்பட்ட தொலைபேசிகள் இல்லையென்றும், தனது தந்தையின் தொலைபேசியையே அவர் பயன்படுத்தியதாகவும், அதிலேயே தம்மை தவறான நடத்தைக்கு உள்ளாக்கினர் என்ற அவர் முறையிட்டுள்ளதாகவும் சுமார் 40 பேரின் தொடர்பு எண்களை அவர் சேமித்து வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தை பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்த சிறுவர் நலக் குழு உறுப்பினர்கள், சிறுமியின் கூற்றுகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க ஒரு உளவியலாளரிடம் ஆலோசனை பெற ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Leave A Reply

Your email address will not be published.