2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது நாட்களுக்குள் மட்டும் 70 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன் பிரகாரம், இந்த ஆண்டின் முதல் ஒன்பது நாட்களுக்குள் 70 ஆயிரத்து 944 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களில் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்தே வருகை தந்துள்ளனர். இலங்கை வந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 789 ஆகும்.
அதற்கடுத்ததாக ரஷ்யா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையானது, நடப்பு 2025ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.