இந்தி தேசிய மொழி அல்ல.., கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேச்சுக்கு அதிர்ந்த அரங்கம்

0 1

இந்தி தேசிய மொழி இல்லை என்றும் அது அலுவல் மொழி மட்டும் தான் என்றும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு சாதனைகளை புரிந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் தனியார் பொறியியல் கல்லூரியின் 23 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அஸ்வின் கலந்து கொண்டார்.

அப்போது, மாணவ மாணவியருக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், ” தமிழ் ஓகே வா, ஆங்கிலம் ஓகே வா, ஹிந்தி ஓகே வா என மாணவர்களை நோக்கி கேட்ட போது தமிழுக்கு மட்டும் மாணவர்கள் ஆரவாரம் எழுப்பினர்.

அப்போது, மாணவர்கள் ஹிந்தி மொழிக்கு ஆதரவு தெரிவிக்காததால், ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி தான் என்று” கூறினார். இதனை கேட்ட மாணவர்கள் மீண்டும் சத்தத்தை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.