வெலிமடை (Welimada) மற்றும் ஊவாபரணகம பிரதேச விவசாயிகள் தமக்கு உர மானியம் வழங்குமாறு அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விதை உருளைக்கிழங்கு, உரம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், உருளைக்கிழங்கு செய்கையில் பரவி வரும் நோய்த் தொற்று காரணமாகப் பயிர்கள் அழியும் அபாயம் உள்ளதாகவும் வெலிமடை மற்றும் ஊவாபரணகம பிரதேச விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், தமக்கு உர மானியம் வழங்குமாறு அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா (Vavuniya) – கோவில்குளம் கமநல சேவை பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எம் ஓ பி பசளை விநியோக நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த உர விநியோகம் நேற்று (21.12.2024) கோவில்குளம் கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் காஞ்சனா தலைமையில் இடம்பெற்றிருந்தது.
6207 ஏக்கர் பெரும்போக நெற்பயிர்ச்செய்கைக்காக 3722 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
குறித்த உரமானது நீர்ப்பாசனத்துக்கு ஒரு ஏக்கருக்கு 12 கிலோவும் மானாவரிக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோவும் வழங்கி வைக்கப்பட்டன.