ஒத்திவைக்கப்பட்ட 2024 உயர்தரப் பரீட்சை – வெளியான அறிவிப்பு..!

6

நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சைகள் நடைபெற மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம், 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.