வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (26) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
றோயல் பார்க் கொலைச் சம்பவத்தின் சந்தேகநபருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்காக பணம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நபர் ஒருவர் சமர்ப்பித்த மனு தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் இன்று (26) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு ராஜகிரிய ரோயல் பார்க் வீட்டுத் தொகுதியில் யுவதி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஜூட் ஷமந்த ஜயமஹா என்ற சந்தேகநபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
அதனை தொடர்ந்து, மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு 2016 மே 17 ஆம் திகதியன்று மன்னிப்பு வழங்கப்பட்டதோடு, தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
அத்தோடு, ஒக்டோபர் 30, 2019 அன்று, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையிலிருந்து விடுவித்து மன்னிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.