இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்களும் அடங்குவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது தமது வர்த்தகம் குறித்தும் கவனம் செலுத்தமாறு உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Comments are closed.