2024 க.பொ.த.உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

18

 2024 க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (19) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது, பரீட்சை திணைக்களத்தினால் (Department of Examinations) விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயர்தரப் பரீட்சைக்கான கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விதிமுறைக்கு இணங்கத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை 2,312 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Comments are closed.